கொரோனாவை விரட்டியடிக்கும் தமிழ்நாடு.. இன்று ஒரே நாளில் 114 பேர் குணம்.. 72 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி

Published : Apr 24, 2020, 06:33 PM IST
கொரோனாவை விரட்டியடிக்கும் தமிழ்நாடு.. இன்று ஒரே நாளில் 114 பேர் குணம்.. 72 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மேலும் 72 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1755ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாடு கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவருகிறது. பரிசோதனை எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று 5882 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டதில் 72 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியிருக்கிறது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1755ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா உறுதியான 72 பேரில் 52 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

கொரோனா பாதிப்பு நேற்று 54 பேருக்கு மட்டுமே உறுதியான நிலையில் இன்றைக்கு 72 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பதால் பாதிப்பு அதிகமாகிவிட்டது என்று பயப்பட தேவையில்லை. ஏனெனில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டிருப்பதால், பாதிப்பு எண்ணிக்கை சற்று ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும்.

72 பேருக்கு இன்று கொரோன உறுதியாகியிருக்கும் நிலையில், இன்று ஒரே நாளில் 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் மொத்தம் 866 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். 

எனவே தற்போதைய நிலவரப்படி, வெறும் 864 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்றுவரும்(864) நம்பரை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை(866) அதிகம். 23,503 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!