டெல்டா வைரஸ் தொடர்பாக தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தகவல்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!

By vinoth kumarFirst Published Aug 29, 2021, 11:06 AM IST
Highlights

பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறை தான். அதனால், கூட்டம் கூடுவதையும், ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற இடங்களில் தான் தொற்று பரவல் ஏற்படுகிறது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்க வரும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது என  சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;-  கொரோனா மரபியல் மாற்றங்கள் ஆய்வு செய்து கண்டறியும் மரபணு ஆய்வகம் சென்னையில் அடுத்த 3 நாட்களில் செயல்பட உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து டிசம்பர் மாதம் முதல் இதுவரை 3,417 மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 2,633 மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளன.

இதில் 80 சதவீதம் அதாவது 2,150 மாதிரிகள் டெல்டா வகை கொரோனா தொற்று. மேலும் 2,150ல் 12 மாதிரிகள் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றாக உள்ளது. இறுதியாக அனுப்பிய 222 மாதிரிகள் அனைத்துமே டெல்டா வகை கொரோனா தொற்று என முடிவு வந்துள்ளது. அண்மையில் கூட்டமான பகுதிகளில் கண்டறியப்பட்ட அனைத்தும் டெல்டா வகை கொரோனா தொற்றாக உள்ளது. இதற்காக, பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறை தான். அதனால், கூட்டம் கூடுவதையும், ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற இடங்களில் தான் தொற்று பரவல் ஏற்படுகிறது.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் 100க்கும் அதிகமாக கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. மேலும் 13 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஏற்றத்தாழ்வுடன் உள்ளது. மேலும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்க வரும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

click me!