இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..!

Published : Aug 24, 2021, 08:53 PM IST
இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..!

சுருக்கம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே 7ம் தேதி ஆட்சிக்கு வந்தது. அன்று முதல் தற்போது வரை முக்கிய மற்றும் உயர் பொறுப்பில் இருக்கும் பல அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே 7ம் தேதி ஆட்சிக்கு வந்தது. அன்று முதல் தற்போது வரை முக்கிய மற்றும் உயர் பொறுப்பில் இருக்கும் பல அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் முதல், நகராட்சி ஆணையர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று வெளியிட்ட அறிவிப்பில்;- 

* சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் இயக்குனராக பொறுப்பு வகிப்பவர் டிஜிபி பிரதீப் பிலிப். இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை கல்லூரியின் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

*  ஆப்ரேஷன்ஸ் பிரிவின் ஏடிஜிபி அமல்ராஜ் ஐபிஎஸ்., சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரை ஆப்ரேஷன்ஸ் பிரிவின் ஏடிஜிபியாக அமல்ராஜ் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!