டீ கடையில் சரக்கு அடித்த புள்ளிங்கோ.. தட்டிக்கேட்ட ஊழியரின் மண்டையை பொளந்த அதிர்ச்சி சம்பவம்..!

Published : Aug 24, 2021, 08:04 PM IST
டீ கடையில் சரக்கு அடித்த புள்ளிங்கோ.. தட்டிக்கேட்ட ஊழியரின் மண்டையை பொளந்த அதிர்ச்சி சம்பவம்..!

சுருக்கம்

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகரில்  டீக்கடை உள்ளது. நேற்றிரவு டீ கடைக்கு சென்ற 3 நபர்கள் பஜ்ஜி மற்றும் ஜூஸ் வாங்கியுள்ளனர். ஜூஸோடு சேர்த்து மது கலந்து கடையினுள் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியதால் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் இங்கு அமர்ந்து மது அருந்த வேண்டாம் என கூறியுள்ளனர். 

சென்னை டீ கடை ஒன்றில் மது அருந்திய இளைஞர்களை தட்டிக்கேட்ட ஊழியர்களை சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகரில்  டீக்கடை உள்ளது. நேற்றிரவு டீ கடைக்கு சென்ற 3 நபர்கள் பஜ்ஜி மற்றும் ஜூஸ் வாங்கியுள்ளனர். ஜூஸோடு சேர்த்து மது கலந்து கடையினுள் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியதால் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் இங்கு அமர்ந்து மது அருந்த வேண்டாம் என கூறியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடை ஊழியர்களை மிரட்டிவிட்டு 3 பேரும் அங்கிருந்து பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர்.

பணம் கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டு அவர்களின் அருகில் சென்றபோது வாகனத்தில் தப்பி செல்ல முயன்றதால் இருசக்கர வாகன சாவியை கடை ஊழியர்கள் எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3  நபர்களும் கடை ஊழியர்களை அடித்து தகராறில் ஈடுபட்டனர். மது அருந்திய நபர்கள் கடை ஊழியர்களை தாக்கியபோது கடையில் இருந்த நாற்காலிகளை எடுத்து ஊழியர்கள் திருப்பி தாக்க முயன்றனர்.

மேலும், கடை ஊழியர்களை மது அருந்தியவர்கள் கண்மூடிதனமாக தாக்கினர். இந்த தாக்குதலில் கடை ஊழியர்கள் இருவரும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அளித்த புகாரின் பேரில் நாகூர் மீரான்(24), அஜித்குமார்(18), மற்றும் ஒரு சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!