Chennai Corporation Order: சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி திடீர் உத்தரவு.. என்ன காரணம் தெரியுமா?

Published : Dec 01, 2023, 08:16 AM IST
 Chennai Corporation Order: சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி திடீர் உத்தரவு.. என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

வங்கக் கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 3ம் தேதி புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னையிலுள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை கனமழை பெய்து அலறவிட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து ஏரி போல் காட்சியளித்தது.  இதனிடையே, வங்கக் கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 3ம் தேதி புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதன் காரணமாக டிசம்பர் 2-ம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையையடுத்து சென்னையிலுள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க;- LPG Gas Price: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை என்ன? உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்..!

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- பொது மக்களின் நலன் கருதி கனமழை எச்சரிக்கையை திரும்ப பெறும் வரையில் சென்னையில் உள்ள பூங்காக்களை மூட உத்தரவிடப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காலையிலேயே இல்லத்தரசிகள் அதிர்ச்சி! திடீரென 5000 உயர்வு! ரூ.3 லட்சத்தை நோக்கி வெள்ளி! அப்படினா தங்கம் விலை?
அதிகாலையில் அலறிய சென்னை! சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி கொ**லை