சென்னையில் பயங்கரம்.. ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா.. சோதனையை தீவிரப்படுத்த திட்டம்..!

By vinoth kumarFirst Published Apr 9, 2021, 3:21 PM IST
Highlights

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.  இந்நிலையில், தேர்தல் முடிந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று தீவிர பரிசோதனை ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை மேற்கு சைதாப்பேட்டை விஐபி சாலையில் உள்ள 249 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் 7 குடும்பங்களை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கடந்தவாரம் பரங்கிமலைக்கு இறுதிச்சடங்கு நிகழ்வுக்காக சென்றுள்ளார். அவர் மூலம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

இதனையடுத்து, குடியிருப்பு வளாகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் காய்ச்சல் முகாம் அமைத்துள்ள அதிகாரிகள் வீடு வீடாகவும் சென்று பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

click me!