#BREAKING மக்களே உஷார்... சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 , எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்..!

Published : Apr 09, 2021, 12:11 PM IST
#BREAKING மக்களே உஷார்... சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 , எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்..!

சுருக்கம்

சென்னையில் மாஸ்க் முழுமையாக அணியாவிட்டால் ரூ.200 அபராதமும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னையில் மாஸ்க் முழுமையாக அணியாவிட்டால் ரூ.200 அபராதமும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம். வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.

சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தலா 1.50 லட்சம் தினசரி அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் தினசரி 1.25 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாநகர் மண்டலத்தில் விதிகளை மீறுவோரிடம் இருந்து தினசரி ரூ.1 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 முறைக்கு மேலாக விதிகளை மீறும் நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படும். கொரோனா குவாரண்டன் விதியை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!