கொரோனா அப்டேட்: தமிழகத்திற்கு தொடர்ச்சியாக ஆறுதல் அளிக்கும் எண்ணிக்கை.! சென்னையில் ழுழு கட்டுப்பாட்டில் கொரோனா

Published : Jul 31, 2020, 06:16 PM IST
கொரோனா அப்டேட்: தமிழகத்திற்கு தொடர்ச்சியாக ஆறுதல் அளிக்கும் எண்ணிக்கை.! சென்னையில் ழுழு கட்டுப்பாட்டில் கொரோனா

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5881 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5881 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று 60,276 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 5881 பேருக்கு கொரோனா தொற்று உறுதியனாது. கடந்த சில நாட்களாக தினமும் தொடர்ச்சியாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவந்த நிலையில், நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக 2 நாட்களாக 6 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகளே உறுதியாகியுள்ளன. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 1013 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 99794ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 வாரமாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துவருகிறது. கொரோனா தீவிரம் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காகத்தான் குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில் இன்று 5778 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று 97 பேர் உயிரிழந்த நிலையில், இன்றும் 97 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 3935ஆக அதிகரித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?