தமிழ்நாட்டில் இன்று மேலும் 6426 பேருக்கு கொரோனா..! ஒரே நாளில் 5927 பேர் டிஸ்சார்ஜ்

Published : Jul 29, 2020, 06:45 PM ISTUpdated : Jul 29, 2020, 06:46 PM IST
தமிழ்நாட்டில் இன்று மேலும் 6426 பேருக்கு கொரோனா..! ஒரே நாளில் 5927 பேர் டிஸ்சார்ஜ்

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 6426 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,34,114ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் இன்று மேலும் 6426 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,34,114ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று 60794 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 6426 பேருக்கு கொரோனா தொற்று உறுதியனாது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,34,114ஆக அதிகரித்துள்ளது. பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதால் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. .

இன்று சென்னையில் 1117 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 97575ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரத்திற்கும் மேலாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துவருகிறது. கொரோனா தீவிரம் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காகத்தான் குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில் இன்று 5927 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,72,883ஆக அதிகரித்துள்ளது. 

இன்று 82 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 3741ஆக அதிகரித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

அதிகாலையில் அலறிய சென்னை! சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி கொ**லை
ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!