கொரோனா அப்டேட்: தமிழ்நாட்டிற்கு ஆறுதல் அளிக்கும் நம்பர்..!

Published : Jul 30, 2020, 06:08 PM IST
கொரோனா அப்டேட்: தமிழ்நாட்டிற்கு ஆறுதல் அளிக்கும் நம்பர்..!

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5864 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,39,978ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5864 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,39,978ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று 61,202 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 5864 பேருக்கு கொரோனா தொற்று உறுதியனாது. கடந்த சில நாட்களாக தினமும் தொடர்ச்சியாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவந்த நிலையில், இன்று நீண்ட இடைவெளிக்கு பிறகு 6 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது கொரோனா பாதிப்பு.

தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,34,114ஆக அதிகரித்துள்ளது. பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதால் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. .

இன்று சென்னையில் 1175 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 98767ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 வாரமாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துவருகிறது. கொரோனா தீவிரம் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காகத்தான் குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில் இன்று 5295 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,78,178ஆக அதிகரித்துள்ளது. 

இன்று 97 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 3838ஆக அதிகரித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!