சென்னையில் அதிர்ச்சி... 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவலர் கொரோனாவால் உயிரிழப்பு..!

Published : May 13, 2021, 05:20 PM IST
சென்னையில் அதிர்ச்சி... 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட காவலர் கொரோனாவால் உயிரிழப்பு..!

சுருக்கம்

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையிலி, கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர் தொற்று பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர். 

இநநிலையில், சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையராக இருந்து வந்தவர் ஈஸ்வரன். சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரனுக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 

இதனையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த உதவி ஆணையர் ஈஸ்வரன் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!