ஆக்சிஜன் தேவைப்படாத கொரோனா நோயாளிகளுக்கு பெரிய கார்களில் படுக்கை வசதி.. சென்னை மாநகராட்சி அதிரடி..!

By vinoth kumarFirst Published May 12, 2021, 6:33 PM IST
Highlights

கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 250 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறியுள்ளார். 

கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 250 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறியுள்ளார். 

சென்னையில் முதற்கட்டமாக 50 கோவிட் சிறப்பு ஆம்புலன்ஸ்கள் சேவையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதனையடுத்து,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டியளிக்கையில்;- ஆக்சிஜன் தேவைப்படாத கொரோனா நோயாளிகளுக்கு பெரிய கார்களில் படுக்கை வசதி செய்து சிகிச்சை அளிக்கப்படும்.  கால் டாக்சிகளை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் முயற்சியை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு இந்த ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி செய்துள்ளது. 

கொரோனா பரிசோதனை செய்யும் அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 2,740 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் 100 படுக்கைகளை அதிகரித்து வருகிறோம்.  சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 3 கோவிட் சிறப்பு அவசர வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 கோவிட் சிறப்பு வாகனங்கள் தொடக்கப்பட்டுள்ளது. லேசான அறிகுறி உள்ள நோயாளிகளை அழைத்து செல்ல சிறப்பு வாகனம் பயன்படுத்தப்படும். கொரோனா அறிகுறி, காசநோய் முகாம், தடுப்பூசி போடச் செல்பவர்கள் வாகனங்களை பயன்படுத்தலாம் என  ககன்தீப் சிங் கூறியுள்ளார்.

மேலும், காய்ச்சல், தொண்டை வலி, வாசனை தெரியாதவர்கள் சுகாதாரதுறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அலுவலர்கள் உடனடியாக நோயாளிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்குவர். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்க 300 மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். மருத்துவம் முடித்த பயிற்சி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்றார்.
 

click me!