சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.. மேலும் 10 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு..!

By vinoth kumarFirst Published May 12, 2021, 2:48 PM IST
Highlights

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர்கள் உட்பட  10 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10  மருத்துவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர்கள் உட்பட  10 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10  மருத்துவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

சென்னையில் கொரோனா தொற்றின் 2வது அலை சுனாமி போல் தீவிரமடைந்து வருவதால் அரசு மருத்துவமனைகளில்  நோயாளிகள் குவிந்து வருகின்றனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 1,850 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதேபோல்,  ஸ்டான்லி அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் செயல்படும் பாரதி மகளிர் கல்லூரியில் 200 படுக்கைகளும், ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 60 படுக்கைகளும், அத்திப்பட்டு கொரோனா சிகிச்சை மையத்தில் 450 படுக்கைகளும் என 2,560  படுக்கைகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்த தலைமை மருத்துவர்கள் உட்பட  10 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10  மருத்துவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு பணிபுரியும் செவிலியர்கள், துப்புரவு ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

click me!