கம்யூ. தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம்… - அப்செட்டில் தலைவர்கள்

Published : Jun 27, 2019, 11:18 AM IST
கம்யூ. தோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம்… - அப்செட்டில் தலைவர்கள்

சுருக்கம்

2019 மக்களவை தேர்தலில், கேரளாவில் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் தோல்வியடைந்ததற்கு, சபரிமலை விவகாரம் என தெரியவந்துள்ளது. இதனால், தலைவர்கள் அசெட்டில் உள்ளனர்.

2019 மக்களவை தேர்தலில், கேரளாவில் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் தோல்வியடைந்ததற்கு, சபரிமலை விவகாரம் என தெரியவந்துள்ளது. இதனால், தலைவர்கள் அசெட்டில் உள்ளனர்.

2019 மக்களவை தேர்தலின் போது, கேரளா மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. 19 இடங்களை, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின.

இதையடுத்து, தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய கமிட்டியின் 2 நாட்கள் ஆலோசனை கூட்டம், திருவனந்தபுரத்தில் நடந்தது.

அப்போது,, சபரிமலை விவகாரத்தில், கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முடிவு தான், தேர்தலில் தோல்வியை அளித்துள்ளது. குறிப்பாக, கம்யூனிஸ்ட் ஆதரவு பெண்களான, கனகதுர்கா மற்றும் பிந்து, சபரிமலைக்கு சென்றது தான், தோல்விக்கு முக்கிய காரணம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில், 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்ல தடை இருந்த நிலையில், அதை தகர்த்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, முதலில் ஏற்ற, காங்கிரஸ் மற்றும் பாஜக பின்னர் தங்களது நிலையை மாற்றிக் கொண்டன.

அந்த கட்சிள், மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரம், தேர்தலில் எதிரொலித்துள்ளது. ஆனாலும், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில், பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றியாக கருதப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மேற்கொண்ட பிரசாரம், பாஜகவுக்கு தோல்வியை கொடுத்துள்ளது என பேசப்பட்டது. இதே கருத்தை கேரள மாநில முதல்வர் முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு