விரைவில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு... - 255 அதிகாரிகள் நியமனம்

By manimegalai aFirst Published Jun 27, 2019, 11:04 AM IST
Highlights

வறட்சி பாதித்த 255 மாவட்டங்களில் இயற்கையை பாதுகாக்கவும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கவும் 255 அதிகாரிகள் தலைமையில் பொறியாளர்கள் குழுக்கள்  உருவாக்கப்பட்டுள்ளன.

வறட்சி பாதித்த 255 மாவட்டங்களில் இயற்கையை பாதுகாக்கவும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கவும் 255 அதிகாரிகள் தலைமையில் பொறியாளர்கள் குழுக்கள்  உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் 'ஜல சக்தி அபியான்' எனப்படும் நீர்வள பாதுகாப்பு அமைப்பின் கீழ் இந்த அதிகாரிகள் செயல்படுவர்கள் என கூறப்படுகிறது. ஆன்லைன்' மூலமாக ஜலசக்தி துறையின் செயலகத்தில், இவர்களது பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்வார்கள். ஒவ்வொரு வட்டங்களின் வறட்சியை போக்கவும் நீர் நிலைகளை பாதுகாக்கவும் நியமிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரிகளின் கீழ், நீர் வள பொறியாளர்கள் அந்தந்த பகுதி மத்திய, மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் உட்பட பலரும் ஈடுபடுவார்கள்.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள 255 அதிகாரிகள், மத்திய அமைச்சகங்களின் கூடுதல் செயலர் அல்லது இணை செயலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 255 மாவட்டங்கள் வறட்சி பாதித்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. அவை 1593 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 313 வட்டாரங்கள் கடும் வறட்சிக்கு உட்பட்டவையாக கண்டறியப்பட்டுள்ளன.

click me!