தனது குடும்பத்தையே வாரி கொடுத்த தாய்க்கு இப்படி ஒரு நோயா? உதவி கரம் நீட்டிய காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்.!

By vinoth kumar  |  First Published Oct 15, 2022, 12:01 PM IST

சென்னை பரங்கிமலையில் ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கல்லூரி மாணவி சத்யா உயிரிழந்த நிலையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல் கரங்கள் அமைப்பின் மூலம் இலவசமாக சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  


சென்னை பரங்கிமலையில் ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கல்லூரி மாணவி சத்யா உயிரிழந்த நிலையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல் கரங்கள் அமைப்பின் மூலம் இலவசமாக சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

சென்னை பரங்கிமலை காதல் விவகாரத்தில் ரயில் நிலைய தண்டவாளத்தில் தள்ளிவிட்டதில் ரயில் மோதி கல்லூரி மாணவி சத்யா துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, மகள் இறந்த செய்தியை அறிந்த பெற்றோர் கதறி  துடித்தனர். தந்தை மாணிக்கம் மகள் சத்யா மீது அளவு கடந்த பாசம் கொண்டவர். மகள் இறந்த துக்கம் தாங்காமல் மதுவாங்கி அதில், மயில் துத்தம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பிணவறையில் மகள் உடல் அருகே தந்தை மாணிக்கம் உடலும் வைக்கப்பட்டது. கணவர் இறந்துவிட்டார் என்ற தகவலை உறவினர்கள் யாரும் மனைவி ராமலட்சுமியிடம் கூறவில்லை. ஏனென்றால் அவருக்கு ஏற்கனவே புற்றுநோய் மற்றும் இருதய பிரச்சனைகள் இருப்பதால் கணவர் மருத்துவமனையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அய்யோ! என் மகளுடன் என் சாமியும் போயிட்டாரே.. நான் இனி என்ன செய்வேன்.. கணவர் இறந்த செய்தியை அறிந்த மனைவி கதறல்

undefined

இதனிடையே, வீட்டிற்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் சென்று சத்யா குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். அப்போது, இறந்து போன சத்யாவின் தாய் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் காவல் ஆணையரிடம் தெரிவித்து, அதற்கான மருத்துவ உதவி கோரினர். ஏற்கனவே, சென்னை காவல்துறையைச் சேர்ந்த 5 போலீசாருக்கு புற்றுநோய்க்கான இலவச சிகிச்சை அளித்து வரும், மருத்துவர் அனிதா ரமேஷ் மற்றும் மருத்துவ குழுவினர் மூலம், சத்யாவின் தாய்க்கு சவீதா மருத்துவமனையில், இலவச சிறப்பு மார்பக புற்றுநோய் சிகிச்சை அளிக்க காவல் கரங்கள் அமைப்பின் மூலம் உதவி செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஏற்பாடு செய்துள்ளார்.

பின்னர், இருவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, ஆம்புலன்சில் சத்யா மற்றும் அவரது தந்தை மாணிக்கம் உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதலில் சத்யாவின் உடல் வீட்டின் முன்பு இறக்கி வைக்கப்பட்டது. அதை பார்த்து தாய் ராமலட்சுமி கதறி அழுதார். அடுத்த சில நொடிகளில் கணவர் மாணிக்கம் உடல் சத்யா உடல் அருகே வைத்த போது தான் கணவர் இறந்த விபரம் ராமலட்சுமிக்கு தெரியவந்தது. உடனே ராமலட்சுமி அலறி கதறி துடித்தார். 

இதையும் படிங்க;-  இந்த துணிச்சல் தான் மாணவி சத்யாவை கொலை செய்ய தூண்டியிருக்கிறது... காவல்துறை விளாசும் ராமதாஸ்..!

click me!