சவக்கிடங்கில் மகள் உடல் அருகே மாணிக்கம் உடலும் வைக்கப்பட்டது. கணவர் இறந்துவிட்டார் என்ற தகவலை உறவினர்கள் யாரும் மனைவி ராமலட்சுமியிடம் கூறவில்லை. கணவர் மருத்துவமனையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
மகள் சத்யா இறந்த அதிர்ச்சியில் துக்கம் தாங்காமல் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட செய்தியை இறுதியில் அறிந்த மனைவி நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.
சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மாணிக்கம் (47). கால் டாக்சி டிரைவரான இவருக்கு, ராமலட்சுமி (43) என்ற மனைவியும், சத்யா(20), தரணி(16), செல்வி(3) என மூன்று மகள்களும் உள்ளனர். மனைவி ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். மூத்த மகள் சத்யா, தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அதே குடியிருப்பை சேர்ந்த சதீஷ் என்பவரை 5 ஆண்டுகளாக சத்யா காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் சத்யாவின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சத்யா, சதீஷ்வுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- இந்த துணிச்சல் தான் மாணவி சத்யாவை கொலை செய்ய தூண்டியிருக்கிறது... காவல்துறை விளாசும் ராமதாஸ்..!
undefined
இதனால், ஆத்திரத்தில் இருந்து வந்த சதீஷ் பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சென்று சத்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி ரயில் வந்தது. உடனே வாலிபரிடம் பேசிய சத்யா தனது தோழியுடன் ரயிலில் ஏற நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். வாலிபர் சத்யாவை பின்னால் இருந்து எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறி சத்யா ரயில் முன்பு தண்டவாளத்தில் விழுந்ததில் தலை துண்டாகி சத்யா துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, மகள் இறந்த செய்தியை அறிந்த பெற்றோர் கதறி துடித்தனர்.
தந்தை மாணிக்கம் மகள் சத்யா மீது அளவு கடந்த பாசம் கொண்டவர். மகள் இறந்த துக்கம் தாங்காமல் மதுவாங்கி அதில், மயில் துத்தம் கலந்து குடித்துள்ளார். மயங்கி நிலையில் கிடந்த மாணிக்கத்தை அவரது உறவினர்கள் மீட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணிக்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். சவக்கிடங்கில் மகள் உடல் அருகே மாணிக்கம் உடலும் வைக்கப்பட்டது. கணவர் இறந்துவிட்டார் என்ற தகவலை உறவினர்கள் யாரும் மனைவி ராமலட்சுமியிடம் கூறவில்லை. கணவர் மருத்துவமனையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
பின்னர், இருவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, ஆம்புலன்சில் சத்யா மற்றும் அவரது தந்தை மாணிக்கம் உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதலில் சத்யாவின் உடல் வீட்டின் முன்பு இறக்கி வைக்கப்பட்டது. அதை பார்த்து தாய் ராமலட்சுமி கதறி அழுதார். அடுத்த சில நொடிகளில் கணவர் மாணிக்கம் உடல் சத்யா உடல் அருகே வைத்த போது தான் கணவர் இறந்த விபரம் ராமலட்சுமிக்கு தெரியவந்தது. உடனே ராமலட்சுமி அலறி துடித்தார். அய்யோ... என் மகளுடன் என் சாமியும் போயிட்டாரே.... நான் இனி என்ன செய்வேன். 2 பெண் குழந்தைகளை வைத்து நான் இனி என்ன செய்வேன்.... கேன்சர் நோயால் நானும் போயிவிடுவேனே.... அதன் பிறகு மகள்களை யார் பார்ப்பார்கள் என்று கூறி துடித்தார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள், காவலர்கள் அனைவரும் கண்கலங்கி நின்றனர்.
இதையும் படிங்க;- அவள உருகி உருகி காதலிச்ச.. அப்படி இருந்தும் எதுக்கு கொலை செய்தேன் தெரியுமா? சதீஷ் சொன்ன ஷாக் தகவல்..!