ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் புல் மப்பில் மட்டையான பெண் திடீரென உயிரிழப்பு..!

By vinoth kumar  |  First Published Oct 15, 2022, 11:31 AM IST

சென்னை வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி சுபத்ரா (32). ஏற்கனவே திருமணமான இவர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 7 வயது மகன் உள்ளார். 


சென்னையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய சுபத்ரா (32) என்ற பெண் நாக்கு வறண்டு, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி சுபத்ரா (32). ஏற்கனவே திருமணமான இவர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 7 வயது மகன் உள்ளார். இந்நிலையில், முதல் கணவரை பிரிந்த சுபத்ரா 2வதாக பார்த்திபனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- Chennai Power Shutdown: சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்.. இன்று இந்த பகுதிகளில் 5 நேரம் கரண்ட் இருக்காது..!

undefined

சுபத்ரா மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம்  வீட்டில் தனியாக இருந்த சுபத்ரா, அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, மயங்கி நிலையில் கிடந்துள்ளார். வேலைக்கு சென்ற பார்த்திபன் மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி போதையில் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, செம்மஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

 அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து, பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுபத்ரா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, அளவுக்கு அதிகமாக  மது அருந்தியதால் சுபத்ரா இறந்தாரா  அல்லது குடும்ப பிரச்னை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும்.

இதையும் படிங்க;-  பிரபல ஹோட்டல் சட்னியில் இறந்து கிடந்த பல்லி.. தெனாவட்டாக பதில் சொன்ன ஓனர்! அதிரடி நடவடிக்கையில் உணவுத்துறை.!

click me!