பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் இருவேறு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ரயில் பயணிகள் அச்சத்தில் ஒளிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.
சென்னை அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை சென்ட்ரல் நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் காலை 9.15 மணி அளவில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்பொழுது ரயிலில் பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மின்சார ரயிலில் இருந்து கீழே இறங்கி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டியின் மீது கற்களை வீசி எறிந்தனர்.
பதிலுக்கு அவர்களும் கற்களை வீசி எறிந்ததால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது. சுமார் 40க்கும் மேற்பட்ட மாநில கல்லூரி மாணவர்கள் பெரம்பூர் லோகோ ரயில்நிலைய நடைப்பாதையில் ஓடிச் சென்று தொடர்ந்து கற்களை வீசி எறிந்ததால் பொதுமக்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.
சென்னையில் ஆணழகன் போட்டிக்கு தயாரான ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உடனடியாக அவர்கள் மின்சார ரயிலில் இருந்த கதவுகளை மூட முயற்சி செய்தனர். ஆனால் பல கதவுகளை மூட முடியாததால் ரயில் பெட்டிக்குள் உள்ளே சென்று ஒளிந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சில கல்லூரி மாணவர்களுக்கு சிறிய அளவிலான காயம் மட்டுமே ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே கலைந்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.