சிறையில் தவறி விழுந்த அமைச்சர் செந்தில் பாலாஜி.. இப்போ டிஸ்சார்ஜ் - இடையில் என்ன நடந்தது.?

By Raghupati R  |  First Published Oct 9, 2023, 3:59 PM IST

ரத்தக்கொதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமின் வழங்கக் கோரி அவரது தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பலமுறை மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது.

Latest Videos

undefined

இந்த நிலையில் புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு இசிஜி எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. 

செந்தில் பாலாஜியின் இதய துடிப்பு வழக்கத்திற்கு மாறாக இருப்பது தெரியவந்ததால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, காலை 4.30 மணி அளவில் தன்னுடைய படுக்கையில் இருந்து தவறி விழுந்திருக்கிறார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சிறையில் உள்ள மருத்துவர்களை அணுகி அங்கு அவரது உடல்நிலை கண்காணித்துள்ளனர். 

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 6.45 மணியளவில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

பிறகு இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இன்று பிற்பகலில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மீண்டும் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

click me!