தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க;- சென்னை வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. அலட்சியமாக இருந்தால் கண் பார்வை பறிபோகும் அபாயம்.. எச்சரிக்கும் மருத்துவர்.!
undefined
தாம்பரம்:
ராஜகீழ்பாக்கம் வெங்கட்ராமன் நகர், முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், மாணிக்கம் நகர், புவனேஸ்வரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தரமணி:
பேபி நகர் சோழமண்டலம் தெரு, பம்மல் நல்ல தம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி:
வானுவம்பேட்டை டிஜி நகர், கேசரி நகர், திருவள்ளுவர் தெரு, தாகூர் தெரு, தாமரை தெரு, மகாலட்சுமி நகர் மூவரசம்பேட்டை மடிப்பாக்கம், சங்கரன் தெரு, பொன்னியம்மன் கோயில், அண்ணா தெரு மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
வியாசர்பாடி:
ஆர்கே நகர், வஉசி நகர், டி.எச்.சாலை பகுதி, சுங்கசாவடி பகுதி, ஸ்டான்லி பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை, கல்மண்டபம், ஜிஏ சாலை, சோலையப்பன் தெரு, பாலு முதலி தெரு, பால அருணாச்சல தெரு, தாண்டவராய முதலி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- 65 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும்..! ஆழ்கடல் மீனவர்கள் உடனே துறைமுகம் திரும்ப உத்தரவு- மீன்வளத்துறை