Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இன்று முக்கிய ஏரியாக்களில் மின்தடை.. இதோ லிஸ்ட்.!

Published : Jan 05, 2023, 08:54 AM IST
Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இன்று முக்கிய ஏரியாக்களில் மின்தடை.. இதோ லிஸ்ட்.!

சுருக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். 

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை , ஐடி காரிடர், பெரம்பூர்  உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

தண்டையார்பேட்டை: 

டி.எச்.ரோடு கும்மாளம்மன் கோயில் தெரு, சோலையப்பன் தெரு, வி.பி.கோயில் தெரு, ராமானுஜம் தெரு, பாலு முதலி தெரு, பழைய வண்ணாரபேட்டை, மண்ணப்பன் தெரு ஒரு பகுதி, நைனியப்பன் தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

ஐடி காரிடர்:

தரமணி பெருங்குடி பவானி அம்மன் கோயில் தெரு, ஜேஜே நகர், ஐஏஎஸ் பத்மநாபன் தெரு, தியாகராஜன் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து அனைத்து பகுதிகளும் அடங்கும்.

பெரம்பூர்:

ஐசிஎப் ஆபீசர் காலனி, திருமலை ராஜா தெரு, கொன்னூர் உயர் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?
Chennai : சென்னைையே மாறப்போகுது.! பேருந்து – ரயில் கனெக்டிவிட்டி ரெடி.. இதை கவனிச்சீங்களா!