அறுவை சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ்.. சக காவலர்கள் செய்த காரியம்.. வாயடைந்துபோன சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால்.!

Published : Oct 18, 2021, 01:32 PM ISTUpdated : Oct 18, 2021, 01:40 PM IST
அறுவை சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ்.. சக காவலர்கள் செய்த காரியம்.. வாயடைந்துபோன சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால்.!

சுருக்கம்

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கடந்த 14-ம் தேதி மாலை வழக்கம்போல் வேப்பேரியில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

இதய அறுவை சிகிச்சைக்குப் பின் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை காவலர்கள் ஒன்று சேர்ந்து வரவேற்றனர். 

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கடந்த 14-ம் தேதி மாலை வழக்கம்போல் வேப்பேரியில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கிரூம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு பரிசோதனை செய்யப்படத்தில் இதயத்தில் 2 இடங்களில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, ஒரு அடைப்பு  ஆஞ்சியோ சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது. மற்றொரு அடைப்பை பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செங்குட்டுவேல் சிகிச்சை அளித்து சரிசெய்தார். அதைதொடர்ந்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் 3 நாள் சிகிச்சை முடிந்து உடல் ஆரோகியத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போது சக காவலர்கள் ஒன்று கூடு அவரை வரவேற்றனர். 

இந்நிலையில், ஓரிரு தினங்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்வார்  என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை சங்கர் ஜிவால் கவனித்து வந்த பொறுப்புகளை டிஜிபி சைலேந்திரபாபு கூடுதலாக கவனித்து வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை