#BREAKING சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சு வலி.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!

Published : Oct 14, 2021, 04:53 PM ISTUpdated : Oct 14, 2021, 05:49 PM IST
#BREAKING சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சு வலி.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!

சுருக்கம்

சென்னை மாநகரக காவல் ஆணையராக இருப்பவர் சங்கர் ஜிவால். சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கம் போல பணியில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து சென்னை மாநகரக் காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து, காவல் ஆணையராக பொறுப்பேற்றதில் இருந்து குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தார். 

இதையும் படிங்க;- பாத்ரூமில் ஆனந்த குளியல் போட்ட இளம்பெண்.. பக்கத்து வீட்டு பையன் என்ன செஞ்ச தெரியுமா?

இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை சங்கர் ஜிவால் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தனது அறையில் வழக்கமான அலுவல் பணிகளை கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து, சக அதிகாரிகள் அவரை உடனடியாக அவரை மீட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை