முதல் கட்டமாக மாநகரப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை ஒருங்கிணைத்து ஒரே டிக்கெட்டில் இரண்டு சேவைகளையும் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இந்த வசதி அமலுக்கு வந்துவிடும்.
சென்னையில் மாநகரப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகிய இரண்டு பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்த ஒரே டிக்கெட்டை பயன்படுத்தும் வசதி வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. விரைவில் இத்துடன் புறநகர் ரயில் சேவையும் இணைக்கப்பட உள்ளது.
சென்னையில் பொதுமக்கள் போக்குவரத்துத் தேவைக்காக மாநகரப் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகிய மூன்று வகையான பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பயணிக்கும் மக்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.
undefined
இதனை எளிமையாக்க சென்னையில் இயக்கப்படும் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திற்கும் ஒரே டிக்கெட் பயன்படுத்தும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பிரத்யேகமான மொபைல் அப்ளிகேஷனும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திறகாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சில மாதங்களுக்கு முன் டெண்டர் கோரியிருந்தது.
போலீஸ் இருக்காங்க.. பாத்து போங்க.. டிராபிக் விதிகளை மீறுபவர்களுக்கு அலர்ட் கொடுக்கும் கூகுள் மேப்!
இந்நிலையில், முதல் கட்டமாக மாநகரப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை ஒருங்கிணைத்து ஒரே டிக்கெட்டில் இரண்டு சேவைகளையும் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொபைல் செயலியும் இதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இரண்டு சேவைகளையும் ஒரே டிக்கெட்டில் பயன்படுத்தும் வசதி அமலுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.
இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் பெங்களூருவை சேர்ந்த மூவிங் டெக் இன்னொவேஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஒரே டிக்கெட்டில் மூன்று விதமான போக்குவரத்தையும் பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறையாக ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்! டிசைன் ரெடி... ரீலீஸ் எப்போ தெரியுமா?