ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கமா? உருக்கமாக பேசிய நீதிபதி.. டைம் கேட்ட மனைவி.. நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Jul 7, 2024, 10:28 AM IST

ஆம்ஸ்ட்ராங்கை உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அந்த பகுதியில் இருப்பவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஆம்ஸ்ட்ராங்க் உடலை அங்கு அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. 


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை மயான இடத்தில் தான் அடக்கம் செய்ய முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு 8 பேர் கொண்ட கும்பலால்  வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் எந்த முடிவும் தெரிவிக்காததால், கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனிடம் அவசர முறையீடு செய்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: தலைநகரை கதி கலங்க வைத்த ஆற்காடு சுரேஷ்? இவரை கொலை செய்தது யார்? ஆம்ஸ்ட்ராங்கிற்கு என்ன தொடர்பு?

இதை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். இந்த மனு மீதான விசாரணை  பவானி சுப்பராயன் முன்பு காணொலி காட்சி மூலம் இன்று காலை 9 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பு வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங்கை உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அந்த பகுதியில் இருப்பவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஆம்ஸ்ட்ராங்க் உடலை அங்கு அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. 

அரசு தரப்பில் வாதிடுகையில்: பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகம் அமைந்துள்ள இடம் என்பது மிகவும் குறுகலானது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. இங்கு 16 அடி சாலை தான் உள்ளது. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 2000 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம் வாதிடப்பட்டது. 

இதையும் படிங்க:  நினைத்த படி.. அண்ணன் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை போட்டு தள்ளினோம்.. கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!

இதனையடுத்து நீதிபதி பவானி சுப்பராயன் அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் வேண்டுமே? ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது. ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா? போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம் என தெரிவித்தார். ஆர்ம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன். நீதிமன்றத்தில் பல முறை அவரை பார்த்துள்ளேன். நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். வேறு நல்ல இடத்தை கூறுங்கள். பேசிவிட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன். வழக்கை 10.30 மணிக்கு விசாரிக்கிறேன் என நீதிபதி பவானி சுப்பராயன் கூறினார். ஆனால், 12 மணிக்கு பதிலளிக்கிறோம் என ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு நீதிபதியிடம் முறையிட்டனர். 

click me!