சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு 8 பேர் கொண்ட கும்பலால் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வருகிறது.
சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு 8 பேர் கொண்ட கும்பலால் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
undefined
இதையும் படிங்க: ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்! ஆம்ஸ்ட்ராங்கை போட்டுத்தள்ளிய கும்பல்! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்!
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் எந்த முடிவும் தெரிவிக்காததால், கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனிடம் அவசர முறையீடு செய்தனர்.
இதையும் படிங்க: தலைநகரை கதி கலங்க வைத்த ஆற்காடு சுரேஷ்? இவரை கொலை செய்தது யார்? ஆம்ஸ்ட்ராங்கிற்கு என்ன தொடர்பு?
இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்கக் கூடாது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மாநகரட்சிகளுக்கான நீதிபதியே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து இந்த வழக்கு பவானி சுப்பராயன் முன்பு இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.