ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது.. அதிரடி காட்டிய தனிப்படை போலீஸ்.. பழிக்கு பழியா?

By Raghupati RFirst Published Jul 6, 2024, 10:22 PM IST
Highlights

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மேலும் மூவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது அவரை பின் தொடர்ந்த, 6  பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். 

இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Latest Videos

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் இல்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், கொலை நடந்த 3 மணி நேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர், மற்ற நபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கியை ஜூன் 13ஆம் தேதியே அவர் திரும்பப்பெற்று கொண்டார் என்றும் விளக்கம் அளித்தார். தொடர்பாக, புளியந்தோப்பை சேர்ந்த விஜய், கோகுல், சக்தி ஆகியோர் தற்போது கைதாகியுள்ளனர். 

இந்த சம்பவத்தில் ஏற்கெனவே 8 பேர் கைதான நிலையில், ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலை பழிவாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம் செய்யப்பட்ட உள்ளது. அதுகுறித்த விசாரணை நாளை வரவுள்ளது.

ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்! ஆம்ஸ்ட்ராங்கை போட்டுத்தள்ளிய கும்பல்! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்!

click me!