மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை... போன்பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி!!

By Narendran S  |  First Published Oct 26, 2022, 8:57 PM IST

வர்த்தக சின்ன பிரச்னை தொடர்பாக ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


வர்த்தக சின்ன பிரச்னை தொடர்பாக ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான ஃபோன் பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதுக்குறித்து ஃபோன் பே நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், மொபைல் பே செயலியின் லோகோ, ஃபோன் பே செயலியின் லோகோ போல் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு... தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஆட்சியர் அறிவிப்பு!!

Tap to resize

Latest Videos

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர், இரு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக கூறி, மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு செய்த மகன்... கடுப்பான தந்தையின் செயலால் பரபரப்பு!!

மேலும் மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அனுமதித்த நீதிபதி, இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குவது தொடர்பான ஃபோன் பே கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

click me!