Chennai Power Cut: சென்னையின் முக்கியமான பகுதிகளில் இன்று மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க.!

Published : Oct 26, 2022, 07:16 AM ISTUpdated : Oct 26, 2022, 09:32 AM IST
Chennai Power Cut: சென்னையின் முக்கியமான பகுதிகளில் இன்று மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க.!

சுருக்கம்

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- சென்னையில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாசாலை: 

சிந்தாதிரிப்பேட்டை - வெங்கடேச கிராமணி தெரு, வாலர்ஸ் சாலை, சிங்கண்ண செட்டி தெரு, கிருஷ்ணப்பசெட்டி தெரு

 புதுப்பேட்டை:

 ஈசிஆர் சாலை, விரபத்ரா தெரு, மேற்கு கூவம் தெரு, 

எழும்பூர் : 

 பாந்தியன் சாலை, ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்

அண்ணாநகர்:

 திருமங்கலம் - அண்ணாநகர் மேற்கு மற்றும் விரிவாக்கம், திருவள்ளீஸ்வரர் நகர், எமரால்டு குடியிருப்புகள், வெல்கம் காலனி, மங்கலம் காலனி மற்றும் பழைய திருமங்கலம். முன்னதாக பணிகள் முடிவடைந்தால், மதியம் 2 மணிக்குள் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!