தீபாவளியை பண்டிகையை ஒட்டி கடந்த இரண்டு தினங்களாக சென்னை முழுவதும் பல மணி நேரம் மக்கள் பட்டாசு வெடித்ததில் காற்று தரக்குறியீடு 200 புள்ளிகளை தாண்டி மோசமான காற்று மாசாக பதிவாகி இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
தீபாவளியை பண்டிகையை ஒட்டி கடந்த இரண்டு தினங்களாக சென்னை முழுவதும் பல மணி நேரம் மக்கள் பட்டாசு வெடித்ததில் காற்று தரக்குறியீடு 200 புள்ளிகளை தாண்டி மோசமான காற்று மாசாக பதிவாகி இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மணலியில் காற்று தரக்குறியீடு 250 என அதிக மாசு தரக்குறியீடாக பதிவாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதிலும் நாட்டின் தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை விற்கவோ வாங்கவோகூடாது தடை விதித்து உத்தரவிடப்பட்டது. பட்டாசு வெடித்தால் 200 ரூபாய் அபராதமும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஆனாலும் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் சராசரி தரவுகளின் படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளவீட்டின் படி 312 ஆக பதிவாகி காற்று மாசு மிக மோசமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி நாளான நேற்று உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி பதிவாகியுள்ளது. டெல்லியை சுற்றியுள்ள நோய்டா, காசியாபாத், கிரேட்டர் நொய்டா, குருகிராம், பரிதாபாத் போன்ற நகரங்களிலும் காற்று மாசு மிக மோசமாக பதிவாகியுள்ளது. இது ஒரு புறம் உள்ள நிலையில் சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல மணி நேரங்கள் கோலாகலமாக பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடினார். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஏராளமானோர் பட்டாசு வெடித்ததில் ஒட்டுமொத்தமா நகரமும் புகை மூட்டமாக காட்சியளித்தது.
undefined
இதையும் படியுங்கள்: திருமாவளவன் சாதியற்ற சமுதயத்தை உருவாக்க பாடுபடுகிறார்.. அவர் எங்கள் நட்பு சக்தி.. விசிகவை புகழந்த அண்ணாமலை.
பல இடங்களில் புகை சூழ்ந்ததால் காற்று மாசு வழக்கத்தைவிட பல மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. அதன்படி எண்ணூர் 238 தரக் குறியீடாகவும், ராயபுரம் 232, கொடுங்கையூர் 187, அரும்பாக்கம் 212, வேளச்சேரி 203, மணலி 221, மணலி கிராமம் 250, பெருங்குடி 190, ஆலந்தூர் 218 என பதிவாகியுள்ளது. காற்று தர குறியீட்டை பொருத்தவரையில் 0 - 50 வரை தரக்குறியீடு பதிவாகி இருந்தால் அது நல்ல காற்று என்றும்,
51-100 திருப்திகரமானது என்றும், 101-200 மிதமான காற்று மாசு என்றும் , 201-300 மோசமான காற்று மாசு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளை தாண்டி இருப்பதால் சென்னையின் பல இடங்களில் மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்: ஒரு தாய் பிள்ளையாய் பிணைந்து வாழ்கிறோம்! தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குங்க! ஜவாஹிருல்லா