ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் தராததால் தேர்தலை ஒத்திவையுங்கள்... அடம்பிடித்த சுயேட்சை வேட்பாளருக்கு ஹைகோர்ட் அட்வைஸ்!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 29, 2021, 8:34 PM IST
Highlights

ஆவடி தொகுதியில் பொது சின்ன பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷா இருந்தும் அதை தனக்கு ஒதுக்கவில்லை எனவும், அதனால் தொகுதி தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2016ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி துவங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை திருப்பி அளித்து விட்டு எம்.ஜி.ஆர்.ஐ நினைவுபடுத்தும் வகையில் ஆட்டோ ரிக்‌ஷா, தொப்பி ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.தங்கள் கட்சி சார்பில் ஆவடி, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், இதில் ஆவடி தவிர மற்ற தொகுதிகளில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆவடி தொகுதியில் பொது சின்ன பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷா இருந்தும் அதை தனக்கு ஒதுக்கவில்லை எனவும், அதனால் தொகுதி தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், தேர்தல் நடைமுறையில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 

click me!