​கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம்... ஒரே நாளில் 2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 29, 2021, 07:35 PM IST
​கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம்... ஒரே நாளில் 2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு!

சுருக்கம்

அதிகபட்சமாக சென்னையில் 815 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவலும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று 2,279 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,81,752 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று மட்டும் 1,352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 55 ஆயிரத்து 085 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.இதனால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,684 ஆக அதிகரித்துள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் 815 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று 80,253 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,94,28,501 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.சென்னை,கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர் பகுதியில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் உள்ள 259 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 80,704 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!