உஷார் மக்களே.. இந்த 3 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா... எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்..!

By vinoth kumarFirst Published Mar 29, 2021, 11:29 AM IST
Highlights

கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில், கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா படுக்கை வசதிகளை  சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக, சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் உள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள 46 மாவட்டங்களில், தமிழகத்தில், இந்த மூன்றும் தான் இடம் பெற்றுள்ளன. தற்போது வரை தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில், இரண்டு சதவீதம் பாதிப்பு உள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. எனவே, குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு மட்டுமே செல்வதை நிறுத்த வேண்டும். தமிழகம் முழுதும், கொரோனா கட்டுப்பாடு பகுதிகளை கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, நோய் கட்டுப்பாடு பணிகளை தீவிரப்படுத்த, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது, கிருஷ்ணகிரிமாவட்டத்தை தவிர, மற்ற மாவட்டங்களில், கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டுமே ஒரே நாளில் 2 சதவீதத்திற்கும் மேலாக பொதுமக்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். சென்னையில் 100 பேருக்கு சோதனை செய்தால் 4 பேருக்கு பாசிட்டிவ் வருகிறது. மேலும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

click me!