இனி ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஜாம் இருக்காது! நெடுஞ்சாலைத்துறை கொண்டுவரும் புதிய திட்டம்!

By SG Balan  |  First Published Jun 6, 2023, 8:04 AM IST

ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நெடுஞ்சாலைத் துறை புதிய திட்டம் ஒன்றை வைத்திருக்கிறது. இத்திட்டம் கிண்டி - தாம்பரம் சாலையை வேற லெவலுக்கு மாற்றும் என்று கருதப்படுகிறது.


சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் 45வது தேசிய நெடுஞ்சாலையில் வரும் ஜிஎஸ்டி சாலை சென்னை மாநகரை அதன் புறநகர் பகுதியுடன் இணைக்கிறது. பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் வரை பல முக்கிய இடங்களை இணைக்கும் சாலையாக இருக்கிறது.

சென்னைக்குள் வரும் முக்கிய சாலையாக இருப்பதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் பெருங்களத்தூரில் இருந்து கிண்டி வரை போக்குவரத்து நெரிசல் உச்சத்தை எட்டுகிறது. கிண்டி - தாம்பரம் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்படும்.

Tap to resize

Latest Videos

மெரினாவில் ஜோடியிடம் அத்துமீறிய போதை கும்பல்.. தனியாளாக விரட்டி அடித்த பெண் காவலர் - பொதுமக்கள் பாராட்டு

ஏற்கெனவே வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை மாநகர் பகுதியில் பல சாலைகள் டிராபிக் ஜாமில் சிக்கி திணறி வருகின்றன. இந்நிலையில், சென்னைக்குள் நுழையும் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வழியை மாநில நெடுஞ்சாலைத் துறை பரிசீலித்து வந்தது. அதன்படி சாலையை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்புதான் ரூ.82 கோடி செலவில் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு சாந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை இடையே மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பாலம் ஒருவழிப் பாதையாக இருப்பது குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இருவழிப் பாதையாக பயன்படுத்தும் அளவு அகலமான பாலமாக இருந்தும் ஒருவழிப்பாதையாகவே இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் சொல்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிரான தேர்தல் வழக்கு! 7 ஆண்டுகளுக்கு பிறகு ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

குன்றத்தூர் பாலத்தில் இருவிழி போகுகவரத்து அமல்படுத்தப்பட்டால் ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் குறைக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். கனரக வாகனங்கள் தவிர பைக் மற்றும் கார்களுக்கு மட்டுமாவது இருவழிப்பாதை அனுமதி கொடுக்கலாம் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்தக் கோரிக்கையின் பலனாக நெடுஞ்சாலைத் துறை மேம்பாலத்திற்கு கீழே உள்ள ஜிஎஸ்டி சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பாதுகாப்புத் துறை வசம் உள்ள நிலத்தைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை ரூ.15.7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கிடைத்தபின், சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள கட்டுமானங்களை இடித்து அகற்றும் பணி நடைபெறும். அதற்குப் பின் ஜிஎஸ்டி சாலை விரிவாக்கம் செய்யப்படும். இத்திட்டம் நிறைவுற்றதும் கிண்டி - தாம்பரம்  இடையே போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என வாகன ஓட்டிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து கொலைவெறி! 3 மாதமாக திட்டம் போட்டு கொலை ஆசையை நிறைவேற்றிய இளம்பெண்!

click me!