கொரோனாவை கட்டுப்படுத்த இதுமட்டுமே தீர்வு... மக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 29, 2021, 12:24 PM IST
Highlights

சென்னை சிஐடி காலனியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களைமாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில்,  மே ஒன்றாம் தேதி முதல் 18இல் இருந்து 44 வயது வரை நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதற்காக, கோவின், ஆரோக்ய சேது மற்றும் உமாங் செயலி மூலம் நேற்று மாலை 4 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. ஆனால் ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றதால், மூன்று தளங்களும் முடங்கின.


இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார். சென்னை சிஐடி காலனியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தளங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறும் விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தார். 

கோவாக்சின், கோவிட்ஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என்றும் தெரிவித்தார். இரண்டு தடுப்பூசிகளுமே ஒரே அளவில் பாதுகாப்பானவை என்று தெரிவித்துள்ளார். இரண்டு முறை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு ஒருவேளை கொரோனா பாசிட்டிவ் என வந்தாலும், தொற்றின் தீவிரம் மிக மிக குறைந்த அளவில் தான் உள்ளது, எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். 

click me!