சென்னையில் சுனாமி போல் சுழன்று அடிக்கிறது கொரோனா... தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 29, 2021, 11:10 AM IST
Highlights

கொரோனா 2ம் அலை சுனாமி போல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் கூறியுள்ளார். 

கொரோனா 2ம் அலை சுனாமி போல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் கூறியுள்ளார். 

தலைநகர் சென்னையில் கொரோனா 2ம் அலை மின்னல் வேகத்தில் தாக்கி வருகிறது. தினசரி பாதிப்பு படிப்படியாக உயர்ந்து நேற்று 5000ஐ எட்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 4,764 பேர் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,23,452ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 16,665 பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதில் 25 சதவீத பாதிப்பு சென்னையில் பதிவாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரியான சித்திக் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சென்னையில் சுனாமி போல கொரோனா 2ம் பரவுகிறது. 28 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

 

எனவே பொதுமக்கள் விருந்தினர்களை நேரில் சென்று சந்திப்பது, அவர்களை வீடுகளுக்கு அழைப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் கூட்டமாக கூடுவதையும் முழுமையாக தவிர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இதுபோன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்பட்டால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இதனை உணர்ந்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிய மறக்கக் கூடாது. அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். சென்னையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்வதற்கான பணிகளை விரைவுபடுத்தி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். 

click me!