சென்னையில் கொரோனா பாதிப்பு இல்லாத இரு மண்டலங்கள்..! எது தெரியுமா மக்களே..?

By Manikandan S R SFirst Published Apr 18, 2020, 2:49 PM IST
Highlights

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 


உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. தினமும் 600 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 378 ஆக அதிகரித்து 480 பேர் பலியாகி உள்ளனர். இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் மூன்றாமிடத்தில் நீடித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் தரும் செய்தியாக நேற்று மட்டும் 103 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு தமிழ்நாட்டில் இதுவரை 291 பேர் பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்று உள்ளனர். 

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் சென்னையில் 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ராயபேட்டையில் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திரு.வி.க நகரில் 33 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 26 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 20 பேருக்கும், அண்ணா நகரில் 24 பேருக்கும், தேனாம்பேட்டையில் 19 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதே போல அடையார், பெருங்குடி பகுதியில் தலா 7 பேருக்கும் திருவொற்றியூர், வளசரவாக்கத்தில் தலா 5 பேருக்கும், மாதவரம், ஆலந்தூரில் தலா 3 பேருக்கும் மற்றும் சோழிங்க நல்லூரில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. மேற்கண்ட இடங்கள் அனைத்திலும் அரசு தீவிர கட்டுப்பாடுகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சென்னையில் இருக்கும் 15 மண்டல பகுதிகளில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களாக மணலியும் அம்பத்தூரும் இருக்கிறது. எனினும் அங்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. நேற்று 30 பேரும் இன்று 10 பேரும் சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

click me!