சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா பாதிப்பு... பீதியில் பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Jun 5, 2020, 11:36 AM IST
Highlights

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த மாதம் 29-ம் தேதி 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மே 30-ம் தேதி 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், மே 31-ம் தேதி 1149 பேருக்கும், ஜூன் 1-ம் தேதி 1,162 பேருக்கும், ஜூன் 2-ம் தேதி தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்றும் 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 1072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக சென்னையில் மட்டும் 18,869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் இளம் பெண் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளிகள் எண்ணிக்கை 175ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று சென்னை மின்ட் பகுதியில் உள்ள கொண்டிதோப்பில் ஒரே வீட்டில் வசித்து வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 10 பேர் கொரோாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!