லாரி மீது கார் பயங்கர மோதல்... சென்னை புதுமண தம்பதி உடல் நசுங்கி உயிரிழப்பு..!

Published : Oct 08, 2019, 05:14 PM ISTUpdated : Oct 08, 2019, 05:15 PM IST
லாரி மீது கார் பயங்கர மோதல்... சென்னை புதுமண தம்பதி உடல் நசுங்கி உயிரிழப்பு..!

சுருக்கம்

மாமல்லபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுமண தம்பதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மாமல்லபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுமண தம்பதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தமிழ்மாறன் (21). இவரது மனைவி சுவேதா (20). இவர்களுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகிறது. இந்நிலையில், திருமண நிகழ்ச்சிக்காக தனது உறவினர்களுடன் காரில் மாமல்லபுரம் சென்றுக்கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையோரம் இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

இந்த கோர விபத்தில் தமிழ்மாறன் - சுவேதா தம்பதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!