தீபாவளிக்கு விடுமுறை வேண்டும்... அடம் பிடிக்கும் ஆசிரியர்கள்..!

By vinoth kumarFirst Published Oct 8, 2019, 12:43 PM IST
Highlights

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளும் பிந்தைய நாளும், பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அரசு அறிவிக்க வேண்டுமென ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளும் பிந்தைய நாளும், பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அரசு அறிவிக்க வேண்டுமென ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், ஞாயிற்றுகிழமை என்பதால் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பண்டிகை விடுமுறை கிடைக்காமல் போய்விட்டது. 

இந்நிலையில், இந்த மாதத்தில் எந்தெந்த சனிக்கிழமைகளில், பள்ளி செயல்பட வேண்டும் என்ற விபரத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், இந்த மாதத்தில் மட்டும் மூன்று சனிக்கிழமைகள் அதாவது வரும், 12, 19, 26-ம் தேதிகளில், பள்ளிகளுக்கு வேலை நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளும் பிந்தைய நாளும், வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஏறக்குறைய 5 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விடுமுறை இல்லாத ஒரு சூழலை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை வேலை நாளாக இருந்தால் மாணவர் வருகையும் குறைவாகவே இருக்கும். ஆகையால், வரும், 26ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டமைப்பினர் வேண்டுகொள் விடுத்துள்ளனர். 

click me!