மெரினா அருகே கடலில் 15 கி.மீ. நீந்தி சாதித்த ஆட்டிசம் சிறுவனுக்கு அண்ணாமலை பாராட்டு

By SG Balan  |  First Published Apr 30, 2023, 11:39 PM IST

மெரினா கடற்கரை அருகே 15 கி.மீ. தூரம் கடலில் நீந்தி சாதனை படைத்த மாஸ்டர் லக்ஷய் என்ற சிறுவனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மெரினா கடற்கரைக்கு அருகே வங்கக் கடலில் 15 கிமீ தூரம் கடலில் நீந்தி சாதனை படைத்த மாஸ்டர் லக்‌ஷய் என்ற ஆட்டிசம் குறைபாடு கொண்ட சிறுவனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "இன்று மெரினா கடற்கரைக்கு அருகில் 3 மணி நேரம் 18 நிமிடங்களில் 15 கிமீ தூரம் கடலில் நீந்தி சாதனை படைத்த மாஸ்டர் லக்ஷேயை வாழ்த்தியது தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு சிறந்த தருணம்" என்று கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

மேலும், 11 வயதில், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ள இளைய குழந்தையாக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். மேலும், "தெரியாதவற்றில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பமும், தீவிரமான உறுதியும், பெற்றோரின் அபரிமிதமான அன்பும் இருந்தால் - எதுவும் சாத்தியம் என்பதற்கு லக்ஷய் ஒரு வாழும் உதாரணம்." என அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் பாராட்டி இருக்கிறார்.

சென்னையில் சிக்கிய பாம்புப் பெண்! பெட்டிகளில் கொண்டுவந்த 22 பாம்புகள் பறிமுதல்!

It was a great moment for me to personally congratulate Master Lakshay, who swam 15 KM in the open sea today near Marina Beach in a time of 3 hours & 18 mins.

At the age of 11, he becomes the youngest child with an autism spectrum disorder to have achieved this feat. (1/2) pic.twitter.com/nbQMGBH8jN

— K.Annamalai (@annamalai_k)

undefined

"எல்லாம் வல்ல இறைவனின் அருள் அவர் மீது எப்போதும் இருக்கட்டும்!" என்று பிரார்த்திப்பதாவும் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நீலாங்கரை மெரினா கடற்கரையில் இருந்து வங்கக் கடலில் நீந்தி சிறுவன் லக்‌ஷய் சாதனை படைத்துள்ளார். சிறுவனின் சாதனையை ஆசிய சாதனைப் புத்தகம் அங்கீகரித்துள்ளது. "ஆட்டிசம் பாதித்த குழந்தைகளாலும் சாதனை படிக்க முடியும் என்பதை சிறுவன் லக்‌ஷய் நிரூபித்துள்ளார்" என்று சிறுவனின் பயிற்சியாளர் சதீஷ் குமார் கூறியுள்ளார்.

தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் இந்தச் சாதனை முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்று தெரிவித்த அவர், "இன்னும் ஆதரவு கிடைத்தால் ஆட்டிசம் பாதிப்பு கொண்ட பல குழந்தைகளை கின்னஸ் உலக சாதனை முயற்சிகளுக்கு பயிற்சி அளிக்க முடியும்" என்றும் தெரிவித்துள்ளார்.

நெல்லை ரயில் நிலையம் சாதனை! முதல் முறையாக ரூ.100 கோடிக்கு மேல் வருவாய்

click me!