சென்னையில் சிக்கிய பாம்புப் பெண்! பெட்டிகளில் கொண்டுவந்த 22 பாம்புகள் பறிமுதல்!

By SG Balan  |  First Published Apr 29, 2023, 11:42 PM IST

சென்னை விமான நிலையத்திற்கு வந்த பெண்ணிடம் இருந்து விதவிதமான 22 பாம்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


மலேசியாவில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 22 பாம்புகள் மீட்கப்பட்டன. அவரது லக்கேஜில் இருந்த பல பிளாஸ்டிக் பெட்டிகளில் பாம்புகள் சேமிக்கப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியான வீடியோவில், நீண்ட கம்பியைப் பயன்படுத்தி பாம்புகளை கவனமாக வெளியே எடுப்பதைக் காணமுடிகிறது. சில பாம்புகள் பெட்டிகளில் இருந்து வெளியேறுவதையும் பார்க்க முடிகிறது.

Tap to resize

Latest Videos

2014 முதல் 2023 வரை! பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி கடந்து வந்த பாதை!

இதனையடுத்து கோலாலம்பூரில் இருந்து பாம்புகளுடன் வந்த பெண் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணின் பையில் இருந்து பாம்புகளுடன் ஒரு பச்சோந்தியும் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

On 28.04.23, a female pax who arrived from Kuala Lumpur by Flight No. AK13 was intercepted by Customs.
On examination of her checked-in baggage, 22 Snakes of various species and a Chameleon were found & seized under the Customs Act, 1962 r/w Wildlife Protection act, 1972 pic.twitter.com/uP5zSYyrLS

— Chennai Customs (@ChennaiCustoms)

இதைப்பற்றி சென்னை சுங்கத்துறை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "28.04.23 அன்று, கோலாலம்பூரில் இருந்து AK13 விமானம் மூலம் வந்த ஒரு பெண் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது பைகளைச் ஆய்வு செய்ததில், பல்வேறு வகையான 22 பாம்புகள் மற்றும் ஒரு பச்சோந்தி இருப்புத கண்டுபிடிக்கப்பட்டு, அவை கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சுங்கச் சட்டம்  1962, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது." எனக் கூறியுள்ளது.

On 28.04.23, a female pax who arrived from Kuala Lumpur by Flight No. AK13 was intercepted by Chennai Airport Customs.
On examination of her checked-in baggage, 22 Snakes of various species and a Chameleon were found & seized under the Customs Act pic.twitter.com/pInXiccWRv

— Gautam Kumar Mishra (@gkmishra79)

'உள்ளேன் அய்யா' என இருப்பைக் காட்டிக்கொள்ளும் ஈபிஎஸ்: செந்தில் பாலாஜி சாடல்

click me!