பொன்னியின் செல்வன் படம் பார்த்துக்கொண்டிருந்த பெண் படத்தின் நடுவே திடீரென தற்கொலை

By Velmurugan s  |  First Published Apr 29, 2023, 10:47 AM IST

சென்னை விமான நிலையத்தில் செயல்படும் திரையரங்கில் பொன்னியின் செல்வன் படம் பார்த்துக் கொண்டிருந்த பெண் திடீரென திரையரங்கில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சோழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் வெள்ளிக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில் சென்னையை அடுத்த புளிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் நேற்று தனது குழந்தைகளுடன் சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரையரங்கில் படம் பார்க்கச் சென்றுள்ளார். பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தை பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா படத்தின் நடுவே திடீரென வெளியே வந்தார்.

Tap to resize

Latest Videos

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி; கணவன், மனைவி கைது

அப்போது ஐஸ்வர்யா திடீரென 4வது மாடிக்குச் சென்று யாரும் எதிர்பாராத வண்ணம் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். கீழே விழுந்து படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

click me!