சென்னையில் டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் தானியங்கி மதுபான ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதுக்குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் தானியங்கி மதுபான ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதுக்குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மது விற்பனையை அதிகரிக்க திமுக அரசு அதன் விதிகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி, மாநாடு அரங்குகள், விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள், போன்றவற்றில் மதுபான சேவையை அனுமதிக்க சிறப்பு உரிமம் வழங்கி திமுக அரசு சில நாட்களுக்கு முன் ஆணை பிறப்பித்தது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இயற்கை முறை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - அரசுக்கு கருணாஸ் கோரிக்கை
இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்க அனுமதிக்கும் உத்தரவை அரசு திரும்பப் பெற்றது. இதனிடையே தமிழகத்தில் மது விற்பனையை அதிகரிக்க திமுக அரசு மற்றொரு நூதன முறையை கையாண்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் டாஸ்மாக் நிறுவனம் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரங்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் மதுபானத்தை யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளும் வகையில் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடலூர் மீனவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!
இந்த தானியங்கி மதுபான இயந்திரம் தொடுதிரை வசதியுடன் வருகிறது. அதனை பயன்படுத்தி, மதுபானத்தின் பிராண்டைத் தேர்ந்தெடுத்து கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் தானியங்கி இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெறுவது எப்படி என்பதை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.