அலர்ட் மக்களே.. தமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா தொற்று.. கொரோனா பாதிப்பில் மீண்டும் சென்னை முதலிடம்!

By Asianet Tamil  |  First Published Aug 11, 2021, 10:18 PM IST

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நீண்ட நாள் கழித்து கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
 


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை சற்று ஓய்ந்தது. தற்போதைய நிலையில் இரண்டாயிரத்துக்குக் குறைவாக தமிழகத்தில் கொரோனா தொற்று இருந்துவருகிறது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1964 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று 1930 ஆக தொற்று பதிவான நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. 
இதேபோல தலைநகர் சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 243 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  சென்னையில் புதிதாக 25,320 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 0.8-ஆக உள்ளது. சென்னையில் இந்தப் பாதிப்பு 205 ஆக நேற்று இருந்த நிலையில், இன்று அதிகரித்து காணப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 229 பேருக்கும், ஈரோட்டில் 167 பேருக்கும், செங்கல்பட்டில் 140 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் கோவை முதலிடம் பிடித்துவந்த நிலையில், இன்று சென்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!