அலட்சியமாக இருந்தால் கொத்து கொத்தா கொரோனா பரவும்... எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்..!

By vinoth kumarFirst Published Aug 11, 2021, 3:04 PM IST
Highlights

கொரோனா இல்லை என்ற பூஜ்ஜியம் இலக்கை எட்ட ஒத்துழைப்பு அவசியம். அனைத்து மத ஆலயங்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. தடுப்பூசி குறைவாக போட்டுக்கொண்ட இடங்களை கண்டறிந்து அங்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும். 

கொரோனா இல்லை என்ற பூஜ்ஜியம் இலக்கை எட்ட ஒத்துழைப்பு அவசியம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளுக்கான 15 படுக்கைகளுடன் கூடிய கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன்;- மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கூட்டத்தை தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது போன்ற சொன்னால் கூட சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகமாகிறது. 

இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும்  தொடர்ச்சியாக ஒரு நாள் ஏற்படும் தொற்று எண்ணிக்கை 2000 நெருங்குவது வருத்தம் அளிக்கிறது. சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் 300 பேர் கூடி கூட்டம் நடத்தி அதில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த கூட்டத்தில் பலர் தடுப்பூசி போடவில்லை. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தார். 

பொதுமக்கள் அலட்சியாக செயல்பட்டால் கொரோனா கொத்து கொத்தாக பரவும். கொரோனா இல்லை என்ற பூஜ்ஜியம் இலக்கை எட்ட ஒத்துழைப்பு அவசியம். அனைத்து மத ஆலயங்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. தடுப்பூசி குறைவாக போட்டுக்கொண்ட இடங்களை கண்டறிந்து அங்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும். கொரோனாவை பொதுமக்கள் அலட்சியமாக நினைக்க வேண்டாம். அடையாள தெரியாத மனித வெடிகுண்டு போல கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

click me!