மூளை நரம்புகளில் ஏற்பட்ட பாதிப்பால் பாரதி பாஸ்கருக்கு அறுவை சிகிச்சை.. உடல்நிலை எப்படி இருக்கிறது?

By vinoth kumarFirst Published Aug 10, 2021, 12:48 PM IST
Highlights

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு அறுவை சிகிச்சை பின் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு அறுவை சிகிச்சை பின் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் (52). கெமிக்கல் இன்ஜினியரிங், எம்பிஏ படித்தவர். தனியார் வங்கியில் துணை தலைவராக உள்ளார். வங்கிப் பணிகளுக்கு இடையே, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், பிரபல  தனியார் வங்கியில் பணியாற்றி வந்த போது பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதி பாஸ்கர் பூரண நலம் பெற பிராத்திப்பதாக பல்வேறு பிரபலங்களும், பட்டிமன்ற ரசிகர்களும்  சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். 

click me!