மனைவியின் பணத்தில் வாழும் ஆதவ் ஆர்ஜூனா ஈபிஎஸ்ஸை விமர்சிப்பதா? சொல்வது யார் தெரியுமா?

Published : Jun 01, 2025, 10:47 AM ISTUpdated : Jun 01, 2025, 01:37 PM IST
aadhav arjuna

சுருக்கம்

மனைவியின் பணத்தில் வாழும் ஆதவ் ஆர்ஜூனா எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தது தவறு என்றும் அவரை தவெகவில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவரது மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளார்.

Jose Charles Martin Condemns Aadhav Arjuna for Criticizing EPS: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவுக்கு முன்னதாக தனியார் விடுதியில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா

அப்போது புஸ்ஸி ஆனந்த்துடன் உரையாடிய ஆதவ் அர்ஜுனா, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசிய வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது ''பாஜகவே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விடும். எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வர தயாராக இல்லை. அண்ணாமலை கூட 10 பேரை கூட வைத்துக்கொண்டு தேர்தலில் நின்று 18% ஓட்டு வாங்கினார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை'' என்று ஆதவ் அர்ஜூனா புஸ்ஸி ஆனந்த்திடம் பேசினார். இந்த பேச்சின்போது அவர் ஈபிஎஸ்ஸை ஒருமையில் பேசியது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆதவ் ஆர்ஜூனாவின் பேச்சுக்கு அதிமுகவினர் கண்டனம்

ஆதவ் ஆர்ஜூனாவின் பேச்சுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் ஆர்ஜூனா அரசியலில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினார்கள். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசிய ஆதவ் ஆர்ஜூனாவை தவெக தலைவர் விஜய் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஆதவ் ஆர்ஜூனாவின் மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

ஆதவ் ஆர்ஜூனாவுக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கண்டனம்

இது தொடர்பாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''நமது மதிப்பிற்குரிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனி சுவாமி ஐயாவைப் பற்றி ஆதவ் ஆர்ஜூனாவின் மற்றொரு முட்டாள்தனமான கருத்துக்கு நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மக்களின் மதிப்பு அவருக்குத் தெரியாது

ஆதவ் ஆர்ஜூனா தனது மனைவியின் பணத்தில் வாழ்வதால், வாழ்க்கையில் முன்னேறப் போராடிய மக்களின் மதிப்பு அவருக்குத் தெரியாது. நமது தளபதி விஜய் அண்ணனுக்கு எனது சகோதர வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் மரியாதைக்குரிய கட்சியில் இதுபோன்ற முட்டாள்களை வரவேற்க வேண்டாம்'' என்று கூறியுள்ளார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!