காலம் கடந்தும் இரண்டாவது டோஸ் போடாத ஆறு லட்சம் பேர்… வீடு, வீடாக தேடுதல் வேட்டை நடத்தும் சென்னை மாநகராட்சி..!

By manimegalai aFirst Published Oct 29, 2021, 12:05 PM IST
Highlights

கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க, நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் வெகுசிலர் இரண்டாவது டோஸ் செலுத்தாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க, நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் வெகுசிலர் இரண்டாவது டோஸ் செலுத்தாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி எண்ணிக்கை நூறு கோடியை தாண்டிவிட்டபோதும், முதல் ஐந்து இடங்களில் தமிழ்நாடு இடம்பெற முடியவில்லை. ஆரம்பத்தில் தடுப்பூசி வினியோகத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொண்டதாக கூறப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக மாநில அரசு கேட்கும் தடுப்பூசிகளை மத்திய அரசு அபப்டியே வழங்கி வருகிறது. ஆனாலும், தமிழ்நாட்டில் தடுப்பூசி இலக்கை எட்ட முடியவில்லை.

ஆறு வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தியும் இலக்கை எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது. தடுப்பூசி மீது மக்களுக்கு உள்ள அச்சமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய பின்னர், மது அருந்தக் கூடாது, அசைவம் சாப்பிடக் கூடாது என்பதால் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். அசைவபிரியர்களுக்காகவே தமிழ்நாடு அரசு சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.

பெரும்பாலும் முதல் தவனை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் செலுத்தாமல் சுற்றி வருகின்றனர். இதனால் முழுமையான எதிர்ப்பு சக்தி உருவாகமல் போகும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். சென்னையை பொருத்தவரையில் சுமார் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர், காலம் கடந்தும் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது வரை 75 லட்சம் டோஸ்  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 44 லட்சத்து 96 ஆயிரம்  பேர் முதல் தவணையும், 25 லட்சத்தி 84 ஆயிரம் பேர் 2 தவணையும் செலுத்திக் கொண்டுள்ளனர். பொதுவாக, கோவிஷீல்டு செலுத்தியவர்கள் 120 முதல் 180 நாட்கள் இடைவெளிலும், கோவாக்சின் செலுத்தியவர்கள் 28 முதல் 56 நாட்கள் இடைவெளியிலும் 2வது தவணை செலுத்தி கொள்ள வேண்டும் என கால அவகாசம் மருத்துவர்களால் நிர்ணயிக்கபப்ட்டுள்ளது. அந்தவகையில், சென்னை முழுவதும், முதல் தவணை செலுத்தி கொண்டவர்களில் 5.90  லட்சம் பேர் காலம் கடந்தும் 2 தவணை செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். இதில் 4.03 லட்சம் பேர் கோவிஷீல்டும், 1.87 லட்சம் பேர் கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இரண்டாம் தவனை தடுப்பூசி போடாமல் சுற்றுபவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சம்மந்தபட்டவர்களுக்கு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு முகாம்களுக்கு வரவழைக்கப்படுகிண்றனர். மேலும், மண்டல சுகாதார அலுவலர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று தகவல் தெரிவிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சென்னையில் இதுவரை ஒரு லட்சம் வீடுகளுக்கு நேரடியாக சென்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்ததாவர்கள் நாளை நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

click me!